தூக்குப்போட்டு பள்ளிக்கூட மாணவி தற்கொலை

தூக்குப்போட்டு பள்ளிக்கூட மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2022-06-25 21:21 GMT

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி மலர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் அபிமன்யூ (வயது 16), மகள் கலைவாணி (15). இதில் கோபி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அபிமன்யூ பிளஸ்-1 வகுப்பும், கலைவாணி 10-ம் வகுப்பும் படித்தனர்.

இந்த நிலையில் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கலைவாணி தொங்கினார். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கலைவாணியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கலைவாணி ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 'கலைவாணி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது,' தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்