பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயமானார்

Update: 2023-04-09 18:24 GMT

திருச்சி தென்னூர் ஸ்டீல்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மேரி. இவரது பேரன் ஆனஸ்ட்ராஜ் (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார் சம்பவத்தன்று விளையாட செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலிசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்