நெல்லையில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து..! 29 மாணவர்கள் காயம்
நெல்லையில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 ஆசிரியர்கள் உட்பட 29 மாணவர்கள் காயமடைந்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள உண்டு உறைவிட பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
வேன் ஹைகிரவுண்ட் மாவட்ட தொழில் மையம் அருகே வளைவில் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், வேனில் இருந்த 29 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.