மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது

மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்

Update: 2022-06-28 20:11 GMT

பொன்மலைப்பட்டி, ஜூன்.29-

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். இந்த மாணவி 9-ம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கூட வேனில் சென்றுவந்துள்ளார். அப்போது, வேன் டிரைவராக பணியாற்றிய விமான நிலைய பகுதி முஸ்லிம் வீதியை சேர்ந்த அப்துல்ஹக்கீம் (வயது 27) என்பவர் அந்த மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் இந்த கல்விஆண்டு, மாணவியை வேனில் அனுப்பவில்லை. இந்தநிலையில், மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் அப்துல்ஹக்கீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்