கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியர்கள் திடீர் சாலைமறியலால் பரபரப்பு

கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியர்கள் திடீர் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-02 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகரசபை நடுநிலைப்பள்ளி முன்பு நேற்று காலையில் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள், ஆசிரியைகள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலையூர் ரோடு வழியாக வரும் மினி பஸ்கள் பள்ளி வாசல் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதை தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு உதவி கலெக்டர் மகாலட்சுமி, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பள்ளிக்கூடம் முன்பு மினிபஸ்களை நிறுத்துவதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, ஆசிரியர் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்