எழுத்தறிவு திட்டம் குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
எழுத்தறிவு திட்டம் குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கம்மாபுரம்,
கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோ.ஆதனூர் மற்றும் வேப்பங்குறிச்சி பகுதியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர், எழுத்தறிவு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதற்கு வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். கோ.ஆதனூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல், வேப்பங்குறிச்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கிராம மக்களிடம் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர், எழுத்தறிவு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் மோகன் தாஸ், ரசிகலா, ஆசிரியர் பயிற்றுனர்கள் இளவரசி, கோபாலகிருஷ்ணன் புனிதா, மெர்சி அமலா, ராஜேந்திரன், கனிமொழி மற்றும் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.