சதுரங்க போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை

பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

Update: 2023-01-09 18:45 GMT

பாவூர்சத்திரம்: 

பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. நேஷனல் பப்ளிக் (சி.பி.எஸ்.இ) பள்ளி மாணவர்கள் தென்காசி மாவட்ட சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேக்னஸ் சதுரங்க அகாடமி நடத்திய சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் எஸ்.எம்.ஏ. நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 7-ம் வகுப்பு டேனியல் ராஜா, ரபேல், 5-ம் வகுப்பு சஞ்சிவ் பாலா, பிரித்தீவ் லிங், ருத்ரசன்வி, 3-ம் வகுப்பு அபி வர்ஷினி, 2-ம் வகுப்பு ஸ்ரீமிதுன்ஷிகா, பிரதீப் சங்கர், 1-ம் வகுப்பு கிருத்திக் லிங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

12 வயதிற்கு உட்பட்ட பிரிவில் டேனியல் ராஜா வெற்றி பெற்றார். 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சஞ்சிவ் பாலா 6-வது இடம் பிடித்தார். 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பிரித்தீவ் லிங், அபி வர்ஷினி ஆகியோர் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்தனர். சதுரங்க போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் எஸ்.எம்.ஏ. நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு கிடைத்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் மற்றும் அகாடமிக் டைரக்டர் ராஜ்குமார், டாக்டர் அபிஷா ராஜ்குமார், பள்ளி ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்