பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய திறனாய்வு தேர்வில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2023-04-24 19:00 GMT

பாவூர்சத்திரம்:

8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில் ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் 27 பேர் தேர்ச்சி பெற்று, தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா ரூ.1,000 வீதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி நிர்வாகி மோயீசன் அடிகளார், தலைமை ஆசிரியர் சே. அந்தோணி அருள் பிரதீப், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜானி, மேரி ஜனா, ஜோஸ்பின் கோல்டா, பிரேம்திவ்யா, ஜேம்ஸ் பாஸ்கர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.



Tags:    

மேலும் செய்திகள்