பள்ளி மாணவர்கள் சாதனை

குடியரசு தின விளையாட்டு போட்டியில் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2023-01-23 19:27 GMT

விக்கிரமசிங்கபுரம்:

அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தினம், பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் மாணவன் ரோகித் ஹரிஷ் இரட்டைக் கம்பு வீச்சில் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார். மாணவன் சஞ்சய் மாநில அளவில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றார். இந்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சியாளரையும் பள்ளி தாளாளர் ராபர்ட், பள்ளி முதன்மை முதல்வர் ஆனி மெட்டில்டா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்