டிராக்டர் மோதி பள்ளி மாணவன் பலி

ரிஷிவந்தியம் அருகே டிராக்டர் மோதி பள்ளி மாணவன் பலி

Update: 2023-01-21 18:45 GMT

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் மகன் அபுபக்கர்(வயது15). சித்தால் அரசு மாதிரி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தனது நண்பர் சாலம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அபுபக்கர் ஓட்டினார். அரியாந்தக்கா அருகே வந்தபோது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் அபுபக்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபுபக்கரின் இடது கால் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. சாலமுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் காயம் அடைந்த மாணவன் உள்பட இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபுபக்கர் பரிதாபாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்