பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவர் பலி

குன்னம் அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பள்ளி மாணவர் பலியானார்.

Update: 2023-08-03 19:00 GMT

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசெல்வம். இவரது மகன் பிரசாந்த் (வயது 18). புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் தினேஷ் (18), மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் கர்ணன் (17), அரியலூர் மாவட்டம் கண்டியம் கொள்ளை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் திருமுருகன் (18). இவர்கள் 4 பேரும் கடந்த 1-ந் தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் மேலமாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற சென்றனர். பின்னர் பள்ளியிலிருந்து அரியலூர் சென்றனர். அப்போது சடைக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற தனியார் பள்ளி பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 4 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மாணவன் பிரசாந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். திருமுருகன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்ற 2 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்