விபத்தில் பள்ளி மாணவர் படுகாயம்; பஸ் டிரைவா் கைது
உவரியில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் பள்ளி மாணவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
உவரி ராஜா தெருவைச் சேர்ந்தவர் தாமஸ் லைட்டன். இவருடைய மகன் வின்ஸ் டேப்டன் (வயது 19). பிளஸ்-1 மாணவரான இவர் சம்பவத்தன்று உவரி- இடையன்குடி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த தனியார் பள்ளிக்கூட பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த வின்ஸ் டேப்டனுக்கு நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான வல்லான்விளையைச் சேர்ந்த கணேசை (வயது 25) கைது செய்தார்.