தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார்.

Update: 2022-09-20 19:06 GMT

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள மலைக்கோவில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் பூமிநாதன்(வயது 16). இவர் தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மரம் வெட்ட சென்றுள்ளார். சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வந்தவர் வெகு நேரம் ஆகியும் வராததால் அக்கம் பக்கத்தில், உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் மரம் வெட்ட சென்ற அதே தோட்டத்தில் பெரிய தண்ணீர் தொட்டி இருந்துள்ளது. அதன் அருகில் பூமிநாதன் அணிந்திருந்த ஆடைகள் இருந்தது. இதனை பார்த்தவர்கள் தொட்டியில் பார்த்தபோது மயங்கிய நிலையில் மாணவன் இருந்துள்ளார். மாணவனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்