புள்ளிமான் பள்ளி மாணவன் சாதனை
பணகுடி புள்ளிமான் பள்ளி மாணவன் சாதனை படைத்தான்
பணகுடி:
பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் மெல் கிப்சன், நாகர்கோவில் எவன்ஸ் குழும கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று சாதனை படைத்தார். இதையொட்டி பள்ளியின் நிர்வாகி டாக்டர் பொன்லட்சுமி, தாளாளர் டாக்டர் தேவிகா பேபி மற்றும் ஆசிரியர்கள் அவரை பாராட்டினார்கள்.