நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம்
பாபநாசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம் நடந்தது.
பாபநாசம்:
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை தாங்கி பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன் வரவேற்று பேசினார். முகாமில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், கருத்தாளர்கள் சரவணன், பிரவினா ஆகியோர் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பும் கடைமையும் உணர்ந்து செயல்பட வேண்டும். பள்ளி வளர்ச்சி முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கை மேம்படுத்துதல் வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள். முகாமில் பாபநாசம், அய்யம்பேட்டை, அம்மாப்பேட்டை, மெலட்டூர் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.