கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழுவை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வட்டார அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு வலுப்படுத்தும் பயிற்சி கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, கரூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சத்தியவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 பற்றிய தொகுப்புரை, பள்ளி மேலாண்மை குழு அறிமுகம் மற்றும் செயல்பாடுகள், மாதிரி பள்ளி மேலாண்மை குழு கூட்டம், பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பள்ளி மேலாண்மை குழு சார்ந்த கடமையும், பொறுப்பும் ஆகிய கருத்துகளை ஆசிரிய பயிற்றுனர் மலர்விழி மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர் தீபா ஆகியோர் வழங்கினர். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (மேல்நிலை) காமாட்சி, மணிவண்ணன் (தொடக்கநிலை), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.