பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு கூட்டம்
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு மற்றும் விழிப்புணர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி, ஊராட்சி மன்ற ஒன்றிய கவுன்சிலர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் பூவண்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில் பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் கழிவறை மேலாண்மை, தரமான குடிநீர் வசதி உறுதிப்படுத்துதல், பள்ளியின் வளத்தை மேம்படுத்துதல், பெண் கல்வி இடைநிற்றலை தடுக்கவும், ஊரில் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தப்பட்டது. ெதாடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தின் வாயிலாக பெற்றோர்களால் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் 15 பேரில் தலைவராக உறுப்பினர்களில் ஒருவரான சரளா என்பவரும், துணைத் தலைவராக ரமேஷ் என்பவரும் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்திற்கு பார்வையாளராக ஜெயங்கொண்டம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் அந்தோணி லூர்து சேவியர் கலந்து கொண்டார். கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் உறுப்பினர் சான்றிதழ்களை வழங்கினார். முடிவில் பட்டதாரி ஆசிரியர் சகுந்தலா நெஞ்சு கூறினார்.