வேதாரண்யம் அருகே தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய (இந்து) தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். இதில் கல்விக்குழுவாளர்கள் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி பள்ளி ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது. அதற்காக பள்ளி மாணவர்களின் குடும்பத்தினர், தோப்புத்துறையில் உள்ளவர்களை வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் வைத்து அழைப்பது. வரும் கல்வி ஆண்டில் முதல் மாணவர்களை அதிக அளவில் சேர்ப்பது. மாணவர்களின் பெற்றோர்களை நேரில் சந்தித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப கோருவது. மேலாண்மைக்குழு சார்பில் பள்ளிக்கு புதிய கணினி ஒன்று வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.