பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

விக்கிரவாண்டி அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-10-29 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதற்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தலைமை தாங்கி பள்ளியின் வளர்ச்சி, மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பது குறித்து மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் செல்லையா வரவேற்றார். இதில் ஆசிரியர்கள் விஜய், நாகராஜ், அனுஷா, சந்திரா, ஜீவா, புஷ்பவள்ளி, பெமினா மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியர் சண்முகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்