பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
தொண்டியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
தொண்டி,
திருவாடானை யூனியன் 19 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினார்கள். பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை தலைவர்களாக கொண்ட 5 குழுக்கள் உருவாக்கப்பட்டது. திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருவாசகமணி தலைமை வகித்தார். அனைவரையும் பள்ளி ஆசிரியர் ஆல்பர்ட் மனோகரன் வரவேற்றார். இக்கூட்டத்தில் பள்ளியில் படிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கனிமொழி நன்றி கூறினார்.