பள்ளி விடுதி பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

பள்ளி விடுதி பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

Update: 2023-05-18 18:45 GMT

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிவிடுதி பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெகன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார், மாநில செயலாளர் மகேந்திரன், மாநில பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு விடுதிக்கும் ஒவ்வொரு காப்பாளர் மற்றும் காப்பாளினிகள் பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும். ஒவ்வொரு விடுதிக்கும் 2 சமையலர்கள் நியமிக்க வேண்டும். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் நலன் கருதி இரவு நேர காவலர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விரைவில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொருளாளர் புகழேந்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்