சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் ஜெயாநகரை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் மாலதி (வயது 17). இவர் சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று தனக்கு வயிற்றுவலி இருப்பதாக கூறிய மாலதி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாலதியின் உறவினரான பேச்சியம்மாள் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.