பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-25 19:15 GMT

தர்மபுரி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் யுவஸ்ரீ (வயது 16). இவர் டியூசன் மூலம் 10- ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதுவதற்கு படித்தார். அண்மையில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதினார். துணைத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஒரு பாடத்தில் யுவஸ்ரீ தேர்ச்சி பெறவில்லை. அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்