பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
செஞ்சி அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் அதிரடி கைது
செஞ்சி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும் அவலூர்பேட்டையை சேர்ந்த மணி என்பவரது மகன் ஞானசேகர்(வயது 27) என்பவரும் கடந்த 7 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஞானசேகர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொிகிறது. மேலும் இதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்ட அவர் இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் நடந்த சம்பவத்தை மாணவி அவரது பெற்றோரிடம் அழுதபடியே தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஞானசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.