பள்ளி மாணவி மாயம்
பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவி. இவள் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி பார்த்தனர். இருப்பினும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர். மேலும் அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.