மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி பலி

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி பலியானார்.

Update: 2022-09-22 19:00 GMT

வடமதுரை அருகே ஏ.வி.பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. கூலித்தொழிலாளி. இவருக்கு முத்துராணி என்ற மனைவியும், தவதர்ஷினி (வயது 13), வர்ஷினிதேவி (11), சங்கரேஸ்வரி (6) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். தவதர்ஷினி வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் குளிப்பதற்காக வீட்டில் ஹீட்டர் போட்டுள்ளார்.. சிறிதுநேரம் கழித்து தண்ணீர் சூடாகிவிட்டதா? என்று பார்ப்பதற்காக தண்ணீரில் கை வைத்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட தவதர்ஷினி படுகாயம் அடைந்தார். அவரை பெரியசாமி மற்றும் குடும்பத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தவதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குளிப்பதற்காக ஹீட்டர் போட்ட போது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்