பள்ளிக்கூட விழா
சுரண்டை எஸ்.ஆர்.பள்ளியில் வானவில் திருவிழா கொண்டாடப்பட்டது.
சுரண்டை:
சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மழலையர்கள் சார்பில் வானவில் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஸ்ராம் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா, தலைமை ஆசிரியர் மாாிக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சுகஸ்திகா வரவேற்றார். விழாவில் வானவில் குறித்து தகவல்களை மாணவ-மாணவிகள் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து வானவில் பாடல், வானவில் நடனம் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாணவி இனியாஸ்ரீ நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் நிர்மலா மற்றும் ஜெபசீலி செய்திருந்தனர். ஆசிரியைகள் திவ்யா, அதிஷ்டலட்சுமி ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.