பணகுடி:
பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'பிரைனி பட்ஸ் டே' விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் நிர்வாகி டாக்டர் பொன்னுலட்சுமி தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர் தேவிகா பேபி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் பாடவாரியாக குழுக்களான பல்வேறு தலைப்புகளில் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
மேலும் மாணவர்களால் செய்யப்பட்ட பழ அலங்கார கண்காட்சியும் நடத்தப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.