விழுப்புரத்தில்தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி பள்ளி- கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டியில் பங்கேற்க பள்ளி- கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-06-17 18:45 GMT

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், 2022-23-ம் ஆண்டிற்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளை மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு நடத்தி பரிசு, காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் வருகிற 23-ந் தேதி கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. அதேபோல் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அன்று 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் பங்குபெறுவதற்கான விண்ணப்பத்தை 97869 66833 என்ற செல்போன் எண் அல்லது tamildevelopmentvpm@gmail.com அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரியை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்