பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

புதுச்சத்திரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2022-12-23 18:45 GMT

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் புதுச்சத்திரம் வட்டாரத்திற்கு உட்பட்ட 177 குடியிருப்புகளில் கடந்த 19-ந் தேதி முதல் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் 11-ந் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. முன்னதாக அதற்காக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான திட்டமிடல் கூட்டம் நடந்து இருந்தது. கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கள ஆய்வின்போது பள்ளி செல்லா குழந்தைகள், இடைநிலை என்ற குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்த குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கள ஆய்வில் கரூரில் இருந்து காரைக்குறிச்சிபுதூர் ஊராட்சியில் உள்ள செங்கல் சூளைக்கு இடம்பெயர்ந்து வந்த நிவேதா என்ற மாணவி கண்டறியப்பட்டார். பின்னர் அவர் ஆசிரியர் பயிற்றுனர் தினேஷ்குமார், சிறப்பாசிரியர் சரசு மற்றும் காரைக்குறிச்சிபுதூர் தொடக்கநிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோரால் காரைக்குறிச்சி புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்