அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.

Update: 2023-01-30 20:34 GMT

பாபநாசம்;

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமையில் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார். விழாவில் இலக்கிய மன்ற மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை, பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், முதுகலை ஆசிரியர் லோகநாதன், தமிழ் ஆசிரியர் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்