பள்ளிக்கூட ஆண்டு விழா; ஊர்வசி அமிா்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்பு
தட்டார்மடம் அருகே பெரியதாழை ஆர்.சி. தொடக்கப்பள்ளிக்கூட ஆண்டு விழா நடந்தது. விழாவில் ஊர்வசி அமிா்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
தட்டார்மடம்:
தட்டார் மடம் அருகே உள்ள பெரியதாழை ஆர்.சி. தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பெரியதாழை பங்குதந்தை சுசீலன் தலைமை தாஙகினார். ஊர் கமிட்டி தலைவர்கள் டயன்ஸ், லயோ, ரமேஷ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் சந்தியாகு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும், கல்வியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் பஞ்சாயத்து தலைவர் பிரதீபா, யூனியன் கவுன்சிலர் அஜித், மாவட்ட பொருளாளர் எடிசன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், பேய்க்குளம் டாக்டர் ரமேஷ் பிரபு, ஆழ்வார்திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், சாத்தான்குளம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சக்திவேல் முருகன், பெரியதாழை கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜான், துணைத் தலைவர் எல்ஜியூஸ், மூத்த காங்கிரஸ் உறுப்பினர் மெதனிஸ், ராஜ், ரெனே, சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் அன்ன கணேசன், வட்டார காங்கிரஸ் பொருளாளர் ஞானசிங், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், வட்டார காங்கிரஸ் பொதுச்செயலர் ஜான் ஆசிரியர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் கிங்ஸ்டன், கிராம கமிட்டி தலைவர்கள் உதயமணி, மணி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இணை பங்கு தந்தை கிங்ஸ்டன் நன்றி கூறினார்.