பள்ளி ஆண்டு விழா

எட்டயபுரம் செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-04-01 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் அய்யனார், செண்பகராஜ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ மாரியப்பன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோவில்பட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் பத்மாவதி பரிசுகள் வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்