ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தங்கதுரை தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பத்மாவதி ஆண்டறிக்கை வாசித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணி மற்றும் சீனிவாசன், நடேசன், இருசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சாதனை மாணவர்களுக்கு ராசிபுரம் நகர வளர்ச்சி குழு தலைவர் பாலு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள்மொழி நன்றி கூறினார்.