4 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 4 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-09-12 16:02 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து 100 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிப்படை வசதிகள் கோரும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த தாரணி, பந்தலூர் பகுதியை சேர்ந்த வி.மோனிஷா, தனசஞ்சய், குன்னூர் உலிக்கல் பகுதியை சேர்ந்த காளிராஜ் ஆகிய 4 கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்