ரூ.99 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ரூ.99 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Update: 2023-04-14 10:11 GMT

ஊத்துக்குளி

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்முகம் காங்கேயம் பாளையம் ஊராட்சி ரெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.இதில் 227 பயனாளிகளுக்கு ரூ.99 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த விழாவில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஊத்துக்குளி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, மாவட்ட கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் கலெக்டர் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்டஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்