ரூ.38 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்

ரூ.38 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-10 18:13 GMT

கந்திலி ஒன்றியம் நார்சம்பட்டி ஊராட்சி, பூங்காவனத்தம்மன் கோவில் வட்டம் பகுதியில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின் மூலம் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் அனைவருக்குமான  சமச்சீர் குழாய் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை  பூமி பூஜை போட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, கே.எம்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராணி கிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கே.முருகேசன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ஜி.மோகன்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜோதீஸ்வரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்