தோகைமலை-குளித்தலை பகுதிகளில் பரவலாக மழை

தோகைமலை-குளித்தலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Update: 2023-09-06 18:18 GMT

தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இதேபோல் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் அரைமணி நேரம் பரவலாக மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை இரவும் நீடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்