சாயர்புரம் போப் கல்லூரியில்பட்டமளிப்பு விழா

சாயர்புரம் போப் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2023-04-21 18:45 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் போப் கல்லூரியில் 51-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயரின் ஆணையாளர் தீமோத்யூ ரவிந்தர், நெல்லை மண்டல கல்லூரி உதவி இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் நிகர் பிரின்ஸ் கிப்ஸன் முன்னிலை வகித்தார். கல்லூரி (பொறுப்பு) முதல்வர் செல்வகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருமண்டல உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்ர்ட், திருமண்டல பள்ளியின் மேலாளர் பிரேம்குமார்ராஜா சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தேர்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் வெல்வெட் கெத்சீமா, பொருளாளர் ஜான்சன் ஆசீர் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் ஜெயக்குமார் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்