சாயர்புரம் பகுதியில்இடி மின்னலுடன் பலத்த மழை
சாயர்புரம் பகுதியில் வியாழக்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சாயர்புரம்:
சாயர்புரம் பகுதியில் நேற்று மதியம் முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 4 மணிக்கு பலத்த இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாயர்புரம் பஜார், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.