சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலய கொடியேற்று விழா

சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்று விழா நடைபெற்றது.

Update: 2022-08-26 17:55 GMT

சாயல்குடி,

சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு சாயல்குடி பங்குத்தந்தை பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார். தொபோஸ்கோ சி.பி.எஸ்.சி.இ. பள்ளி தாளாளர் ஆரோக்கியம், முதல்வர் ஆல்பிரட், பங்குத்தந்தைகள் சார்லஸ், பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. அதற்கான முதல் நாள் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாதா கோவில் நிர்வாக தலைவர் ஜெயராஜ், செயலாளர் காமராஜ், பொருளாளர் தொம்மை செபஸ்டியன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சியில் சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், வட்டார நாடார் சங்க தலைவர் மாடசாமி, வி.வி.ஆர்.நகர் இந்து நாடார் உறவின்முறை தலைவர் விஷ்ணுகாந்த், தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்