சிறுமியை காப்பாற்றியவாலிபருக்கு பாராட்டு

குற்றாலத்தில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய வாலிபருக்குபோலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2023-01-02 18:45 GMT

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் கடந்த 29.12.2022 அன்று தனது குடும்பத்தினருடன் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது, அவரது மகளான 4 வயது சிறுமி தடாகத்தில் உள்ள துவாரத்தின் வழியாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு, சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தாள். அப்போது இதனைப் பார்த்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் ரோடு பகுதியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநரான செல்வராஜ் மகன் விஜயகுமார் (24) என்பவர் விரைந்து சென்று, பள்ளத்தில் இறங்கி சிறுமியை பத்திரமாக மீட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

அருவி தடாகத்தில் குளித்த சிறுமி தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டபோது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று காப்பாற்றிய இளைஞர் விஜயகுமாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்