தூத்துக்குடி அருகே சனிக்கிழமை மின்தடை

தூத்துக்குடி அருகே சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-06-16 14:50 GMT

தூத்துக்குடி அருகே உள்ள மஞ்சள்நீர்க்காயல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் ஏரல், சிறுதொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்காணி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம், ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இதே போன்று வல்லநாடு மின் விநியோகப்பிரிவுக்கு உட்பட்ட கலியாவூர், சின்ன கலியாவூர், அம்பேத்கார் நகர், காலாங்கரை, உழக்குடி பகுதிகளிலும், குளத்தூர் மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட வேடநத்தம், டி.வி.துரைச்சாமிபுரம், சக்கம்மாள்புரம், வெங்கடாசலபுரம், முத்துக்குமாரபுரம், சுந்தரேசபுரம் ஆகிய பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பழுதடைந்த மின்கம்பம் மாற்றுதல், தொய்வான மின்பாதையை சரி செய்தல் போன்ற பணிகள் நடக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்