சத்தியமங்கலத்தில்கந்து வட்டி கேட்டு மிரட்டும் தம்பதி மீது நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டிடம் பெண் கோரிக்கை

சத்தியமங்கலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டும் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் கோரிக்கை விடுத்தாா்.

Update: 2023-05-29 20:30 GMT

சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியை சேர்ந்த முரளியின் மனைவி மேகலா (வயது 30) ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-

எனது மாமியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவ செலவுக்காக சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியிடம் இருந்து ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். அவர்கள் ஒரே வாரத்தில் ரூ.3 லட்சத்துக்கு ரூ.80 ஆயிரம் வட்டி கேட்டனர். 4 வாரங்கள் வட்டி தொகையை கொடுத்துவிட்டேன். அதன்பிறகும், கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் பலரிடம் இருந்து கடன் வாங்கி மொத்தம் ரூ.11 லட்சம் கொடுத்து உள்ளேன். ஆனால் மேலும் ரூ.4½ லட்சம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மிரட்டுகின்றனர். எனவே கந்துவட்டி கேட்டு மிரட்டும் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்