சத்தியமங்கலத்தில்வாகனம் மோதி போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது
சிக்னல் கம்பம்
சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் அருகே போக்குவரத்து சிக்னல் கம்பம் உள்ளது. நேற்று அதிகாலை இந்த சிக்னல் கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இந்த விபத்தில் போக்குவரத்து சிக்னல் கம்பம் முறிந்து கீழே விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முறிந்து விழுந்து கிடந்த சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'முறிந்த கம்பம் சீர்செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து சிக்னல் கம்பம் விரைவில் பொருத்தப்படும்,' என்றனர்.