சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.850-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.850-க்கு ஏலம் போனது.

Update: 2022-11-17 21:19 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 3½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.735-க்கும், முல்லை ரூ.440-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.33-க்கும், பட்டுப்பூ ரூ.30-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.735-க்கும், முல்லை ரூ.340-க்கும், காக்கடா ரூ.250-க்கும், செண்டுமல்லி ரூ.51-க்கும், பட்டுப்பூ ரூ.22-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினத்தை விட நேற்று முல்லைப்பூ கிலோவுக்கு ரூ.100-ம், கனகாம்பரம் கிலோவுக்கு ரூ.350-ம், விலை உயர்ந்து விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே வேளையில் ஜாதிமல்லி கிலோவுக்கு ரூ.100 குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து மார்க்கெட் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'கனகாம்பரம் மற்றும் முல்லை பூ ஆகிய பூக்கள் மிகவும் குறைவாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கனகாம்பரம் மற்றும் முல்லை பூவுக்கு தேவை அதிகம் இருந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதனால் விலை உயர்ந்து விற்பனை ஆனது. மேலும் ஜாதிமல்லி வரத்து அதிகமாக இருந்தது. இதனால் போட்டி இல்லாததால் அது விலை குறைந்து விற்கப்பட்டது,' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்