சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.927-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.927-க்கு ஏலம் போனது
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். வழக்கம்போல் நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 3½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.927-க்கும், முல்லை ரூ.200-க்கும், காக்கடா ரூ.275-க்கும், செண்டுமல்லி ரூ.100-க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும், சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.