சத்தி மார்க்கெட்டில் ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.613 விலை உயர்ந்தது

சத்தி மார்க்கெட்டில் ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.613 விலை உயர்ந்தது.

Update: 2022-10-27 21:47 GMT

சத்தியமங்கலம்

சத்தி மார்க்கெட்டில் ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.613 விலை உயர்ந்தது.

பூ மார்க்கெட்

சத்தியமங்கலம் கடத்தூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிைகப்பூ கிலோ ரூ.1,225-க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.95-க்கும், பட்டுப்பூ ரூ.155-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.820-க்கும், சம்பங்கி ரூ.90-க்கும், அரளி ரூ.300-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.220-க்கும் ஏலம் போனது.

விலை உயர்ந்தது

நேற்று முன்தினம் நடந்த ஏல விலையை விட நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோவுக்கு 613 ரூபாய் விலை உயர்ந்தது. இதேபோல் முல்லை பூ கிலோவுக்கு ரூ.440-ம், காக்கடா ரூ.175-ம், செண்டுமல்லி ரூ.15-ம், பட்டுப்பூ ரூ.75-ம், ஜாதிமல்லி ரூ.250-ம், சம்பங்கி ரூ.75-ம், அரளி ரூ.100-ம் விலை உயர்ந்தது.

கனகாம்பரம் மட்டும் நேற்று முன்தினம் விற்ற விலையை விட கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்தது. முகூர்த்த நாள் நெருங்கி வருவதாலும் அதே நேரம் மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்ததாலும் விலை உயர்ந்ததாக சங்க நிர்வாகிகள் கூறினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்