சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-01 16:09 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கமலா, சொக்கலிங்கம், சிவன், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெற்றிசெல்வி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.9750-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.

காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள், ஓய்வுபெற்றவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்