சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-10 18:16 GMT

ஆர்ப்பாட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தனபாக்கியம் சிறப்புரை ஆற்றினார்.

இதில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பிச்சையம்மாள் உள்பட ஓய்வூதியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ேகாஷங்கள் எழுப்பினர்.

சிறப்பு ஓய்வூதியம்

மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் தமிழக அரசு வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு, ஈமச்சடங்கு நிதி ரூ.25 ஆயிரத்தை வழங்கிட வேண்டும்.

டேட்டா சென்டர் மற்றும் ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட சமூக நலத்துறை நிர்வாகங்கள் பொது வைப்பு நிதி பெறுவதற்கு மூத்த குடிமக்களை வதைக்க கூடாது.

ஓய்வு கால பலன்களை ஓய்வு பெறும் அன்றே முழுமையாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்